நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி தளத்தில் வெப் தொடர்கள் பிரதான இடம் வகிக்கிறது. அதிகபட்சம் 10 எபிசோட்களை கொண்ட தொடர்கள் சினிமாவுக்கு நிகராக தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் வெப் தொடர் பக்கம் சென்றாலும் முன்னணி நடிகர்களுக்கு தயக்கம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் நடிகர்கள் வெப் தொடரில் நடிப்பதை சின்னத்திரை சீரியலில் நடிப்பதை போன்று கருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக துல்கர் சல்மான வெப் தொடருக்கு வருகிறார். தி பேமிலி மேன் தொடரின் இரண்டு சீசன்களையும் இயக்கிய ராஜ்-டீகே இரட்டையர்கள் இயக்கும் 'கன்ஸ் அண்ட் குலாப்ஸ்' தொடரில் நடிக்கிறார் துல்கர். இதில் அவருடன் ராஜ்குமார் ராவ், ஆதர்ஷ் கவுரவ் நடிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த தொடர் 90களின் காதல் உலகை பற்றிய காமெடி தொடராக உருவாகிறது. தொடர் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
துல்கர் சல்மான் தற்போது தமிழ் மலையாளத்தில் தயாராகும் ஹே சினாமிகாவிலும், மலையாளத்தில் சல்யூட் படத்திலும், ரிவேன்ஸ் ஆப் ஆர்ட்டிஸ் என்ற இந்தி படத்திலும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஹானு ராகவபுடி இயக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.