ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கேரளாவைச் சேர்ந்த பிரஜின், சின்னத்திரை தொடர்களில் பிரபலம். இது ஒரு காதல் கதை, பெண், அஞ்சலி, உள்பட பல தொடர்களில் நடித்தவர் அதன்பிறகு சினிமா பக்கம் போனார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் தீ குளிக்கும் பச்சை மரம் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.
அதன்பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஒரு ஹீரோவாக நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், சின்னத்தம்பி, அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தாள் தொடர்களில் நடித்தார்.
இந்த நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார், நினைவெல்லாம் நீயடா, சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, பெயரிடப்படாத ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் விதமாக வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து வெளியேறினார் பிரஜின்.
இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பிரஜினுக்கு பதிலாக ராஜபார்வை தொடரில் நடித்த முன்னா நடிக்கிறார்.