‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
பேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகளை திரைப்படங்களில் நடிகைகள் அணிவது வழக்கம். கவர்ச்சியாக, கிளாமராக அணிந்தால், ஒரு வேளை அவை எல்லை மீறியதாக இருந்தால் சென்சார் அவற்றைப் பார்த்துக் கொள்ளும். ஆனால், நிஜ வாழ்வில் அப்படி அணியும் போது அவை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது மும்பையில் உள்ளார். அங்கு பாலிவுட் படங்களுக்கான பேச்சு வார்த்தைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார்கள். 'த பேமிலி மேன் 2' மற்றும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது சமந்தாவை பாலிவுட்டிலும் பிரபலமாக்கியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் ஒரு சலூனிற்கு வந்த சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சமந்தா அணிந்துள்ள டீ ஷர்ட்டில், ஆங்கிலத்தில் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை வைத்து எழுதப்பட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுவெளியில் இப்படியான வாசகங்களுடன் ஆடை அணிவது இளம் தலைமுறையினரிடமும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமந்தாவுக்குத் தெரியாதா ?.