கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னிபிளஸ் ஹார்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்கெனவே விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வனிதாவை அழைத்தார் கமல்ஹாசன். தொடர்ச்சியாக 14 போட்டியாளர்களையும் வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தேன், இப்போது சின்னத்திரையில் இருந்து கைபேசி திரைக்கு வந்திருக்கிறேன். நாளை கடிகாரத்துக்குள் வந்தாலும் அதற்கும் வருவேன். விஜய் டிவி பிக்பாஸை தினமும் ஒரு மணி நேரம்தான் பார்க்க முடிந்தது முழுமையாக பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் போதும் என்று நினைக்கிறவர்கள், தினமும் இரவு 9 மணிக்கு தொகுப்பை பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்கள் ஏற்கெனே பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவசாலிகள்தான். அவர்களில் சிலர் விட்ட இடத்தை பிடிக்க வந்திருக்கலாம் அல்லது தீர்க்க வேண்டிய கணக்கை தீர்க்க வந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்களின் விளையாட்டு உங்களை சுவாரஸ்யப்படுத்தும், பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நீங்கள் நிகழ்ச்சியை கவனியுங்கள். நீங்கள் சரியாக கவனிக்கிறீர்களா? என்று நான் உங்களை கவனிக்கிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?. என்றார் கமல்.