ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
நடிகை காஜல் அகர்வால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே தொழிலதிபர் கவுதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் சில தெலுங்கு படங்களில் இருந்தும், தமிழில் இந்தியன் 2விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது: திருமணம் ஆனபிறகு, நடிகைகள் சினிமாவிலிருந்து விலகும் காலம் தற்போது மாறிவிட்டது. உலகம் முழுவதுமுள்ள சினிமாத் துறைகள் மாறிவிட்டன. நடிகர்கள் எடுக்கும் சொந்த முடிவுகள் அவர்களது சினிமா வாழ்க்கையில் பிரதிபலிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளும் அளவுக்கு மக்கள் முதிர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் நாம் தொடர்ந்து நம் வேலையை செய்யலாம்.
திருமணத்துக்கு முன்பிருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். சமீபகாலமாக எனக்கான கதாபாத்திரங்களையும் நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். எனது சொந்த வாழ்க்கை முடிவுகள் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.