மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |
மற்ற எந்த ஹீரோக்களின் ரசிகர்களை விட அஜித்தின் ரசிகர்கள் தான் அவரது பட அப்டேட்டுக்களை கேட்டுக்கேட்டு வாங்க கூடியவர்கள்.. அப்படி படம் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து அப்டேட் வந்தால் அதை வைத்து ஒரு மாதம் சோஷியல் மீடியாவை உண்டு இல்லை என பண்ணி விடுவார்கள்.
அந்தவகையில் தற்போது அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள வலிமை படம் குறித்து அந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், “வலிமை முதல் பாதி முழுவதும் புலன் விசாரணையாக இருக்கும். இடைவேளைக்குப்பின் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட்டாக இருக்கும்” என சமீபத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தார்கள்.
அப்டேட்டே கொடுக்காத மனிதர்கள் மத்தியில், பரவாயில்லையே.. படத்தின் கதை நகரும் விதத்தையே இவர் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் அவரை பாராட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அந்த தகவல் திலீப் சுப்பராயன் கவனத்துக்கு சென்றதும் மனிதர் பதறிப்போய் விட்டார். காரணம் அது அவரது ஒரிஜினல் சமூகவலைதள கணக்கு அல்ல..
இதை தெரியப்படுத்தியுள்ள திலீப் சுப்பராயன், அந்த நபரின் கணக்கு குறித்து புகார் அளியுங்கள். அந்த கணக்கை பிளாக் செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.