ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும் கர்நாடக மக்களின் மனம் கவர்ந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவருமான புனித் ராஜ்குமார் கடந்த நவம்பர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணத்தை தழுவினார். கன்னட ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் இறப்பதற்கு முன்னதாக மூன்று படங்களில் நடித்திருந்தார்.. அதில் இரண்டு படங்களில் சில நிமிடங்கள் வந்துபோகும் கெஸ்ட் ரோல் தான். இதில் ஜேம்ஸ் என்கிற படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் இறப்பிற்கு முன்னதாகவே அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்தது.
இந்தநிலையில் வரும் மார்ச்-17 ஆம் தேதியன்று புனித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஜேம்ஸ் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் புனித் ராஜ்குமாரை கவுரப்படுத்துவதற்காகவும், அன்றைய தினத்தில் இருந்து அடுத்த வாரம் வரை வேறு எந்த படங்களையும் ரிலீஸ் செய்வதில்லை என கன்னட திரையுலகத்திலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.