கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி |
தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி டைரக்சனில் வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் நானே வருவேன் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி அந்தப்படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்தநிலையில் தற்போது வாத்தி படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் அந்தப்படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.
இந்த இருவருமே தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை என்கிற பொதுவான காரணத்தை தான் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இப்படி இரண்டு பெரிய படங்களில் இருந்து அவர்கள் வெளியேற, நாயகன் தனுஷ் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. காரணம் இரண்டு படங்களிலும் அவர்தான் ஹீரோ என்பதால் அவருடன் முரண்பட்டபின் தொடர்ந்து பணியாற்ற விரும்பாமல் இந்த இருவரும் வெளியேறியதாக யூகமாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த இருவரும் தனுஷ் படத்தில் இருந்து வெளியேறியபின் அவர்கள் வெளியிட்ட செய்தியிலேயே தாங்கள் வெளியேறியதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லாமல் சொல்லியிருந்ததை பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
யாமினியின் பதிவில், “இயக்குனர் செல்வராகவனுடனும் இந்தப்படத்தின் கிரியேட்டிவ் குழுவினருடன் இணைந்து பணியாற்றியபோது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதுடன் மிகச்சிறந்த சிறந்த அனுபவமாகவும் இருந்தது” என கூறியிருந்தார். இதில் தனுஷ் பெயரை அவர் குறிப்பிடவே இல்லை.
அதேபோல ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் தனது பதிவில், “வாத்தி படத்தில் துரதிர்ஷ்டவசமாக என்னால் தொடர்ந்து பணியாற்ற இயலாமல் போனது என்று வழக்கம்போல் கூறினாலும் கூட, அடுத்ததாக வாத்தி பட தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் நாகவம்சி, இயக்குனர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என நம்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இவரும் தனுஷ் பெயரை இந்த பட்டியலில் சேர்க்கவே இல்லை.
இவர்களது இந்த பதிவுகளே அவர்கள் இருவரும் வெளியேறியதற்கு காரணம் தனுஷுடன் ஏற்பட்ட ஏதோ முரண்பாடு தான் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.