சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
வலிமை படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்க இருக்கிறார் என்பதும் அந்தப்படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தநிலையில் பாலிவுட் நடிகை தபு இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2000ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்கிற படத்தில் அஜித் - தபு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தவகையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். தவிர, தயாரிப்பளார் போனி கபூர் இதற்கு முந்தைய அஜித்தின் இரண்டு படங்களிலும் வித்யாபாலன், ஹூமா குரேஷி என பாலிவுட் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், இந்தப்படத்திலும் அதை தொடர்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.