மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஓடிடி வெர்ஷன் நிகழ்ச்சிக்கான புரோமோஷன் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முந்தைய சீசன்களின் முக்கிய போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் பிக்பாஸ் குழு, நடிகர் சிநேகனை முதல் போட்டியாளராக ஓகே செய்துள்ளது. இது தொடர்பில் புரோமோ வீடியோவும் வெளியாகிய நிலையில், அடுத்த போட்டியாளர் குறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளே உருவான ஜூலி தான் பிக்பாஸ் அல்டிமேட்டின் இரண்டாவது போட்டியாளர். அந்த வீடியோவில் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கு வந்து சோதனைகளை சாதனைகளா மாத்துங்க என்று சொல்ல ஜூலி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.