குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் 'பாமாகலாபம்'.. அபிமன்யு என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் பிப்-11ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசரை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.
“இந்தப்படத்தின் டீசரை பார்க்கும்போது வேடிக்கையாகவும் அதேசமயம் ஒரு ஸ்வீட்டான கதை இருப்பதும் தெரிகிறது. பிரியாமணிக்கு என் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் ராஷ்மிகா. இந்தப்படத்தில் பிரியாமணி, தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டிலேயே சமையல் சம்பந்தமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தும் அனுபமா என்கிற இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் நிகழும் ஒரு கொலையும் அதன்பின் அனுபமாவின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் தான் இந்தப்படத்தின் கதையாம்.