3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி |

தமிழில் விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவின் தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவ்தீப். அதன்பிறகு சின்னச்சின்ன படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், அஜித் நடித்த ஏகன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். இடையில் கடந்த விக்ரம் பிரபுவின் 'இது என்ன மாயம்', ஜீவா நடித்த 'சீறு' படத்தில் வில்லனாக என ஒன்றிரண்டு தமிழ் படங்களில் மட்டுமே தலைகாட்டினார். இருந்தாலும் தெலுங்கில் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
35 வயதாகியும் இன்னும் திருமணமாகாத நவ்தீப்பிடம் சோஷியல் மீடியா சாட்டிங்கின்போது அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்வியே, உங்கள் திருமணம் எப்போது என்பதுதான்.. திருமணம் செய்யாமல் ஒருவர் வாழக்கூடாதா என்ன..? எதற்காக என் திருமணத்தை பற்றியே கேள்வி எழுப்புகிறீர்கள் என அவ்வப்போது பதில் கூறி வந்தார் நவ்தீப்.
இந்தநிலையில் சமீபத்திய சோசியல் மீடியா உரையாடலில், ரசிகர் ஒருவர் முடி நரைப்பதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வது தான் நல்லது என்று கூறினார் .இதனால் நவ்தீப் கோபமானாலும் கூட, “முடி நரைத்தால் அழகாக ட்ரிம் செய்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர, திருமணம் செய்வது அல்ல என்று அதற்கு வித்தியாசமாக பதில் அளித்ததுள்ளார்.