தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் அஆஇஈ, இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்வர் நவ்தீப். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் போதை பொருள் அதிரடி சோதனை நடந்து பல திரைப்பட நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் சிக்கினர். அப்போது நவ்தீப்பிற்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஒரு போலீசார் அதிகாரி, இந்த வழக்கு தொடர்பாக நவ்தீப்பிடம் விசாரணை நடத்த இருப்பதாக சமீபத்தில் கூறினார். இந்த தகவலை நவ்தீப் மறுத்தார். போலீசார் தேடும் நவ்தீப் நான் இல்லை. எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் நவ்தீப் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் கும்பலுடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நவ்தீப்பை கைது செய்ய போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.




