'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் நாயகன். இந்த படத்தில்தான் சரண்யா நாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், கார்த்திகா, நாசர், தினு ஆனந்த், தாரா உள்பட பலர் நடித்திருந்தனர், குயிலி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மும்பை தாராவி பகுதியில் தாதாவாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. முக்தா பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு நாயகன் படம் மீண்டும் வெளிவருகிறது. பிலிமில் எடுக்கப்பட்ட இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, நவீன ஒலி அமைப்பு இணைக்கப்பட்டு வருகிற நவம்பர் 3ம் தேதி வெளிவருகிறது. எஸ்3 பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் வெளியிடுகிறது.