'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தனது 69வது படம் தான் அவரது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கின்றார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், இன்று காலை 11:11க்கு ‛விஜய் 69' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு ‛ஜனநாயகன்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. தொண்டர்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பது போல் போஸ்டரில் இடம்பெற்றது. தற்போது 4 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இதில் சாட்டையால் விஜய் அடிப்பது போன்றும், ‛நான் ஆணையிட்டால்..' என்ற வாசகமும் அடங்கியுள்ளது.
ஒரேநாளில் விஜய்யின் கடைசி படத்தின் இரு போஸ்டர்கள் வெளியானதால் அவரது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.