சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் முக்கியமான விருதுகளாக பத்ம விருதுகள் இருக்கின்றன. இந்த வருடத்திற்காக அறிவிக்கப்பட்ட விருதுகளில் தமிழ் சினிமா நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து இதுவரையில் 40க்கும் மேற்பட்டவர்கள் 'கலை' சார்பான பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் திரையுலகத்தைச் சார்ந்த இளையராஜா, ஏஆர் ரஹ்மான், வைரமுத்து, கேஜே யேசுதாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், பி.சுசீலா, பானுமதி ராமகிருஷ்ணா, குமாரி கமலா, எம்எஸ் சுப்புலட்சுமி என பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நடிகர்களைப் பொறுத்தவரையில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் விஜயகாந்துக்கு அவரது மறைவுக்குப் பிறகே விருது அறிவிக்கப்பட்டது.
சீனியர் நடிகர்களான சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்து பத்ம பூஷன் விருதைப் பெறும் நடிகராக அஜித் இருக்கிறார். விருதுகளைப் பொறுத்தவரையில் தமிழக அரசின் கலைமாமணி விருது 2000ம் ஆண்டும், 2006ம் ஆண்டில் எம்ஜிஆர் விருதும் அஜித்துக்கு வழங்கப்பட்டது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். மேலும் குறைந்த அளவிலான சில சினிமா விருதுகள் அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.




