2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சினிமாவில் நடித்துக் கொண்டே கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டு வரும் நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஜனவரி மாதம் 25ம் தேதி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அஜித் குமார், நடிகை, ஷோபனா உள்பட 3 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விருதை வாங்குவதற்காக தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் சென்னையிலிருந்து டில்லிக்கு விமானத்தில் சென்றார் அஜித். டில்லியிலும் குடும்பத்தினர் உடன் அஜித் இருக்கும் போட்டோ, வீடியோ வலைதளங்களில் வைரலானது.