'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
மணிரத்னம் இயக்கியுள்ள தக்லைப் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்தபடியாக மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இது குறித்த தகவல் அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அந்த மூன்று படங்களில் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி வந்தது. தற்போது டிராகன் படத்தில் நடித்த கயாடு லோகரை ஒப்பந்தம் செய்திருப்பதாக அப்படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம், அவரது புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.