நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கும் கயல் சீரியல் நடிகை | நயன், விக்கி மகன்கள் முதல் பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து | ஆஸ்கருக்கு செல்லும் ‛2018' மலையாள திரைப்படம் | 'லியோ' விழா ரத்து : தவிர்க்கப்பட்டதா மற்றுமொரு 'மறக்குமா நெஞ்சம்' ? | நடிகரான ஆடை வடிவமைப்பாளர் : மலிங்காவாக நடிக்க ஆசை என்கிறார் | லெஸ்பியன்களாக நடித்தது ஏன்? - நடிகைகள் விளக்கம் | யாரும் தொடத் துணியாத ஒரு கதையை பாலா தொட்டிருக்கிறார் : தயாரிப்பாளர் | 'சித்தா'தான் என் முதல் படம்: சித்தார்த் நெகிழ்ச்சி | மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு | ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ் |
கொடைக்கானலில் உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா 15 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டிடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜமீர் என்பவர் கவனித்து வந்தார். இந்த கட்டிட பணிகள் முடியும் தருவாயில் பாபி சிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜமீரின் நண்பர் உசேன் சமரசம் பேசி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராம் ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவோம் என உசேனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாபி சிம்ஹா மற்றும் ராம் ஆகியோர் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.