'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சினிமா நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கொடைக்கானலில் அனுமதியின்றி விதிகளை மீறி பங்களாக்கள் கட்டுவதாக தாக்கலான வழக்கில்,'சீல்' வைக்க, கட்டடத்தை அகற்ற மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு முகமது ஜூனைது தாக்கல் செய்த பொதுநல மனு: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பேத்துறைப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவிற்கு சொந்த நிலம் உள்ளது. அதில் இருவரும் பங்களாக்கள் கட்டுகின்றனர். அரசுத்துறையிடமிருந்து கட்டட அனுமதி பெறவில்லை. மலைப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் இயற்கை பேரிடரின்போது மண் அரிமானத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். நடிகர்கள் என்பதால் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. திண்டுக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முகமது ஜூனைது குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: பாபி சிம்ஹா தாய் கிருஷ்ணகுமாரி பெயரில் கட்டடம் அமைக்க வில்பட்டி ஊராட்சியில் 2019ல் 2400 சதுர அடிக்கு அனுமதி பெறப்பட்டது. அனுமதித்த அளவைவிட கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் அனுமதி பெறவில்லை. இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பி, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு திட்ட விதி படி 'சீல்' வைக்க கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: தற்போதைய நிலை குறித்து கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜன.,10 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.