சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜவான்'. இப்படம் 800 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் 'ஜவான்' படம் ஆஸ்கருக்குச் செல்ல வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டுள்ளார் அட்லீ.
“எல்லாம் சரியாக நடந்தால் 'ஜவான்' படம் ஆஸ்கர் செல்லும். ஒவ்வொரு முயற்சியும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு இயக்குனரும், சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொரு டெக்னீசியனுக்கும், 'கோல்டன் குளோப், ஆஸ்கர், தேசிய விருது, அனைத்து விருதுகள்' மீதும் ஒரு பார்வை இருக்கும். எனவே, எனக்கும், 'ஜவான்' படத்தை ஆஸ்கருக்குக் கொண்டு போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பார்ப்போம். இந்த பேட்டியை கான் சார் பார்த்து, படிப்பார் என நினைக்கிறேன். “சார் இப்படத்தை ஆஸ்கருக்குக் கொண்டு போவோம்,” என அவரிடம் தொலைபேசியிலும் கேட்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. இந்தியத் தேர்வுக் குழு தரப்பிலிருந்து 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. மாறாக, படக்குழுவினரே நேரடியாக ஆஸ்கருக்கு விண்ணப்பித்து தேர்வானார்கள். 'ஜவான்' படத்திற்கு எப்படி நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.