மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
தெலுங்கு பட உலகில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி 30 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்த தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.
நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவரும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
நவ்தீபிடம் அமுலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு நவ்தீப் மழுப்பலான பதில்களை சொன்னதாகவும், அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டபோது என்னை ஒரு கொலை குற்றவாளி போன்று கேள்வி கேட்கிறீர்கள் என்று நவ்தீப் கோபப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் அவரிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை கொடுத்து அதற்கு பதில் எழுதி அனுப்புமாறு கூறியதுடன், மறு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பியதாக தெரிகிறது.
தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப், தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், நெஞ்சில் சில் சில், சொல்ல சொல்ல இனிக்கும், அஆஇஈ, இது என்ன மாயம் படங்களில் நடித்துள்ளார்.