சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கேரள மாநிலம் பத்தனம்திட்டா புள்ளியோட புரா கோவிலில் சாமிகள் உலா வரும் படகுகள் கோவில் வளாகத்தில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த படகில் அதற்கென விரதம் இருந்தவர்கள், வேட்டி, துண்டு அணிந்து மட்டுமே ஏற முடியும். குறிப்பாக பெண்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் இந்த படகில் மலையாள சின்னத்திரை நடிகை நமிஷா பிஜோ அவரது நண்பர் உன்னியுடன் ஏறி அந்த படகில் புகைப்படங்கள் எடுத்துளார். அதோடு படகில் செருப்பு காலுடன் ஏறி உள்ளனர்.
இதனால் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் (சேவா சமிதி) திருவள்ளா போலீசில் நடிகை மீது புகார் செய்தனர். அதன்படி நிமிஷா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (வழிபாட்டு இடத்தை அவமதித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிமிஷாவும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த படகின் புனிதம் பற்றி தனக்கு தெரியாது என்றும், அறியாமல் செய்த தவறுக்கு இறைவன் சன்னிதானத்தில் நின்று மன்னிப்பு கேட்பதாகவும் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தால் அவர் மன்னிக்கப்படலாம், அல்லது சிறிய அளவில் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.