'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா தற்போது ஒரு பேட்டியில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாகசைதன்யா, சமந்தா விஷயத்தில் எல்லா தந்தைகளின் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு பிறகு எனது மகனுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். அதோடு இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டதுதான். அவர்தான் விவாகரத்துக்கு ரொம்ப ஆசைப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார் நாகார்ஜுனா.