கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு | ‛தி கிரேமேன்' டிரைலர் தமிழிலும் வெளியானது - வில்லனாக தனுஷ் |
ஜீவா நடித்த சீறு படத்தின் மூலம் அறிமுகமானவர் ரியா சுமன். தற்போது அவர் சந்தானம் ஜோடியாக ஏஜெணட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவின் மன்மதலீலை என்ன மாதிரியான படம் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதை போட்டு உடைத்தார் ரியா சுமன். நடித்து முடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம், நடிக்க உள்ள மன்மத லீலை குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான இந்த இரண்டு படங்களிலும் ஒரு பகுதியாக இருப்பதில், மகிழ்ச்சி அடைகிறேன். ஏஜெண்ட் ஸ்ரீவஸ்தவா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தழுவலாக உருவாகும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்காக இயக்குநர் மனோஜ் பீதா என்னை அணுகியபோது, கதையை கூறிவிட்டு தெலுங்கு படத்தை பார்க்க சொன்னார்.
அதை பார்க்க நான் விரும்பவில்லை ஏனெனில் அந்த பாத்திரத்தின் தாக்கம் தன்னுள் ஏற்படுவதை விரும்பவில்லை. படப்பிடிப்பை முடித்த பிறகு, அசல் பதிப்பை பார்த்த போது, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கும், நான் நடித்த கதாபாத்திரத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை உணர்ந்தேன். தமிழுக்காக அந்த பாத்திரம் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்து நடிக்கும் மன்மத லீலை கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்கால கதையில் நான் நடிக்கிறேன். இதற்குமேல் படம் பற்றியும், எனது கேரக்டர் பற்றியும் விரிவாக கூற இயலாது. என்றார்.