இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்திற்கு மன்மதலீலை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படம் கே.பாலச்சந்தா் இயக்கத்தில் கமல் நடித்த படத்தின் டைட்டிலை கொண்டிருக்கிறது. கலாகேந்திரா நிறுவனம் தயாரித்த படம் இது. வெங்கட் பிரபு தயாரிப்பு நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.
இந்த தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று கே.பாலச்சந்தர் ரசிகர் மன்ற பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 1976ம் ஆண்டு, கலாகேந்திரா நிறுவனத்தின் பி.ஆர்.கோவிந்தராஜன், ஜே.துரைசாமி தயாரிப்பில், இயக்குநர் கே.பாலசந்தரின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவானது மன்மத லீலை திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்த திரைப்படம். இந்த வருடத்தோடு வெளியாகி 46 வருடங்கள் ஆகப்போகிறது.
மன்மத லீலை என்கிற பெயரை, கலாகேந்திரா தயாரிப்பாளர்களின் அனுமதி இல்லாமல், இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு மன்மத லீலை பெயரை சூட்டி இருப்பது இயக்குநர், வெங்கட்பிரபு செய்தது தவறான செயலாகும்.
கலாகேந்திரா நிறுவனத்தார்களிடம் பேசி, அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கமும், தமிழ் ரசிகர்களும் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். கலாகேந்திரா நிறுவனத்தார்கள், சட்ட ரீதியாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.