சின்னத்திரையில் பாண்டியராஜன் | எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! |
மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் மன்மதலீலை. சமீபத்தில்தான் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதற்குள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டார்கள்.
வருகிற ஏப்ரல் 1ம் படம் வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது தெரியுமா?. மாநாடு படத்திற்கு முன்பே மன்மதலீலை படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருந்தார் வெங்கட்பிரபு. இந்த படம் அடல்ட் கண்டன்ட் படமாக ஓடிடி வெளியீட்டுக்காக தயாரானது. மாநாடு படம் முடிந்ததும் படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து தலைப்பையும் அறிவித்தார்.
படத்தின் தலைப்பு, மற்றும் டீசர் ஏற்படுத்திய பரபரப்பால் படத்தை தியேட்டரில் வெளியிடுமாறு தியேட்டர்கள் அதிபர்கள் வலியுறுத்தவே ஓடிடி வெளியீட்டை கைவிட்டு விட்டு தியேட்டரில் வெளியிடுகிறார்கள். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.