'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து தற்போதும் ஓடிடி தளத்திலும், தியேட்டரிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்.
என்.டி.பாலகிருஷ்ணாவும், படத்தின் நாயகி ஜெய்ஸ் வாலும் ஜீப்பில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு லாரி குறுக்கே வந்துவிட திடீர் என்று பிரேக் போடுவார் பாலய்யா. இதனால் பக்கத்து சீட்டில் இருக்கும் ஜெய்ஸ்வால் தலை காரின் முன்பகுதியில் போதும். அதனை தன் கை வைத்து தடுக்கும் பாலையா. முதலில் சீட் பெல்ட போட வேண்டும் என்பார்.
இந்த காட்சியை காரில் செல்வபர்கள் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்காக ஐதராபாத் போலீசார் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி ஸ்ரீனு ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.