விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

டாக்டர், டான் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ஒரு பேட்டியில் கூறுகையில், அயலான் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். குறிப்பாக ஏலியன்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளது. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை வெகுவாகக் கவரக்கூடிய இந்த படம் திரைக்கு வரும்போது சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அந்த அளவுக்கு அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.