சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
இயக்குனர் செல்வராகவன் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது மனைவியும், இயக்குனருமான கீதாஞ்சலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது செல்வராகவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிப்பதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதேப்போன்று மலையாளம், மற்றும் தமிழ் நடிகர் ஜெயராமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திடீரென்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இதில் கொரோனா என்னை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியிருக்கிறார்.