இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ், தெலுங்கில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. இடையில் அவருக்குப் படங்கள் குறைவாக வர ஆரம்பித்தது. அந்த சமயத்தில் படங்களைக் குறைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என தமன்னா விரும்பினார்.
ஆனால், சமீப காலத்தில் அவருக்கு சில பல புதிய பட வாய்ப்புகள் வருவதால் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளாராம். இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணத்தை தள்ளிப் போட முடிவெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னா தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இரண்டு மொழிகளிலும் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். மேலும், 'கனி' என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். கன்னடத்தில் ஒரு பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளாராம். ஆனால், தமிழில்தான் தமன்னாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.