7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! | ரஜினி - கமல் இணையும் படம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது? | தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறது | டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது | நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி | கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு | பிளாஷ்பேக் : நீச்சல் உடையில் பரபரப்பு கிளப்பிய அமலா | 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர் | 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் |

தமிழில் தற்போதும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'கர்ஜனை, சதுரங்க வேட்டை, ராங்கி' ஆகிய படங்களும் வெளிவர வேண்டும்.
இந்நிலையில் இந்த மாதத் துவக்கத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த்ரிஷா கொரானோவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அங்கேயே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து கடந்த வாரம் தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்து வரும் முதல் வெப் தொடரான 'பிருந்தா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நாய்களுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தான் மீண்டும் நடிக்க வந்துவிட்டது பற்றி பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா, ஆகியோர் வரிசையில் த்ரிஷாவும் வெப் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இதில் அவர் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறியவுடனே பலரும் நடிக்க வந்துவிடுகிறார்கள்.




