அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! |
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்து கடந்தாண்டு வெளியான படம் ‛ஜெய்பீம்'. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்றதில் 'ஷாஷங் ரிடெம்ப்ஷன்' திரைப்படத்தை முந்தி 'ஜெய்பீம்' சாதனை படைத்தது. அதேபோல், ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் 'ஜெய் பீம்' இடம்பெற்றது.
சமீபத்தில் ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யு-டியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் 'ஜெய் பீம்' திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் 'ஜெய் பீம்' திரைப்படமும் இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இடம்பெற்றிருந்தது.