175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஆஸ்கர் விருது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே ஆஸ்கர் விருது வழங்கப்பட்டாலும் வெளிநாட்டுப் படங்களுக்கென சில சிறப்பு விருதுகளையும் வழங்கி கவுரவிக்கிறார்கள். அந்த விருதுகளுக்காகப் பல நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
ஆஸ்கர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பதிவிலும் தங்களது படங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுவதை உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் விரும்புகிறார்கள். ஆஸ்கர் அகாடமி, 'ஆஸ்கர்ஸ்' என்ற யுடியூப் சானல் ஒன்றை நடத்தி வருகிறது. அதில் 'ஜெய் பீம்' படம் பற்றிய 12 நிமிட வீடியோ ஒன்று இடம் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் படத்தின் சில முக்கிய காட்சிகளும், இயக்குனர் த.செ.ஞானேவல் பேட்டியும் இடம் பெற்றுள்ளது. படத்தின் உருவாக்கம் பற்றி அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தில் இது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.