டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் | அடல்ட் கன்டன்ட் படமாக வெளிவரும் 'பெருசு' | 'எமகாதகி' கதை எனக்கு புரியவில்லை: ரூபா கொடவாயூர் | சுந்தர்.சி அல்லாத வெளிப்படத்தை தயாரிக்கும் குஷ்பு | தமிழில் வெளியாகும் மலையாளப் படம் 'ஆபிசர் ஆன் டூட்டி' |
தென்னிந்தியத் திரையுலகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் நாகசைதன்யா, சமந்தா பிரிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு எதிர்பாராத விதத்தில் வெளியாகி இரவு முதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டி வருகிறார். கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் டில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். அப்போது கூட சமூக வலைதளத்தில் அவர்கள் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து “அவர்கள் என்னவர்கள், இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி” என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.
அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனுஷ் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' பட டிரைலர் வெளியீட்டின் போது படக்குழுவினரைப் பாராட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை, நேற்று ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இவர்களது பிரிவு பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த், தனுஷ் இருவரது ரசிகர்களும் ஒரு படி மேலே போய் ஒருவரை, மற்றொருவர் தாக்கும் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.