'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'வீரமே வாகை சூடும்'. இந்த மாதம் 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்பு ஜனவரி 14ம் தேதி சென்னையில் உள்ள தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டிம்பிள் ஹயாத்தியும் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் டிம்பிள் ஹயாத்தி தான் கொரானோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறுநாளே அவருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரானோ பாசிட்டிவ் வந்துள்ளது. லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது, மற்றபடி நலமாக இருக்கிறேன். ஆலோசனைப்படி என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டதால்தான் லேசான பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாஸ்க் அணிய வேண்டும், சானிட்டைஸ் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.