ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
வளர்ந்து வரும் தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி. 'கல்ப்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் தேவி 2 படத்தில் நடித்த அவர் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருந்தார். ஐதராபத்தில் வசித்து வரும் டிம்பிள் ஹயாதி அதே பகுதியில் குடியிருக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் முட்டல், மோதல் இருந்து வந்துள்ளது.
போலீஸ் அதிகாரியின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன், தனது காரால் மோதி சேதப்படுத்தியதாகவும் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க கோர்ட் மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.