ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? | பிறந்தநாளில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி | பிளாஷ்பேக் : பாடகி எஸ் ஜானகியை அழவைத்த இளையராஜாவின் பாடல் | அந்நியன் 2ம் பாகத்தை எதிர்பார்த்த விக்ரம் |
ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கு பிறகு பிரபாஸ் தற்போது தான் நடித்து ஆதிபுருஷ் படத்தை அதிக அளவில் எதிர்பார்க்கிறார். ராமாயணம் கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்க ஓம் ராவத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் ஜூன் 16ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியான சமயத்திலேயே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராமன், அனுமன், ராவணன் ஆகியோரது தோற்றங்கள் குறித்து அப்போதே சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி இந்த படத்தில் பிரபாஸின் தோற்றத்தை கிண்டல் அடித்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “நமது பாரம்பரியத்தில் ராமரும் லட்சுமணனும் மீசை வைத்துக் கொண்டதாகவும் பேசியல் செய்த சிகை அலங்காரம் கொண்டிருப்பதாகவும் எங்கேயும் சொல்லப்பட்டிருக்கிறதா ? குறிப்பாக பிரபாஸுடைய தெலுங்கு திரையுலகத்திலேயே பல ஜாம்பவான்கள் ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். எனக்கு பிரபாஸின் தோற்றத்தை பார்க்கும்போது அவர் கர்ணனாக தெரிகிறாரே தவிர, ராமனாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
ஆனால் கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பிரபாஸின் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.