டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
தமிழில் 'தேவி 2, வீரமே வாகை சூடும்' படங்களில் நடித்தவர் டிம்பிள் ஹயாதி. ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் அவரது ஆண் நண்பர் விக்டர் டேவிட் உடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறாராம். அவர்களது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ராகுல் ஹெக்டே என்பவருடன் கார் பார்க்கிங் விஷயமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத் காவல் துறையில் டிராபிக் பிரிவில் உதவி கமிஷனராக பணி புரிபவர் ராகுல் ஹெக்டே. அவரது அலுவலக வாகனத்தை அவருக்குரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். பார்க்கிங் ஏரியாவிற்கு வரும் போதெல்லாம் போலீஸ் வாகனத்தை டிம்பிள் எட்டி உதைத்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். பத்து நாட்களுக்கு முன்பு தன்னுடைய காரை டிம்பிள் எடுக்கும் போது போலீஸ் வாகனத்திற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், போலீஸ் வாகன டிரைவருடன் டிம்பிள் அடிக்கடி சண்டைக்குச் செல்வாராம். அதனால் டிரைவர் சேத்தன் குமார் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் டிம்பிள் மீது புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு வாகனத்தை வேண்டுமென்றே இடித்ததற்காகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் டிம்பிள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் டிம்பிள் அவரது வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, “அதிகாரத்தைப் பயன்படுத்துவது எந்தத் தவறையும் நிறுத்தாது,” என பதிவிட்டுள்ளார் டிம்பிள்.