'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில், அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'அருந்ததி' தெலுங்குப் படம் வெளிவந்து நேற்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தெலுங்கில் மட்டும் பெரிய வெற்றியைப் பெறாமல், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வசூலைப் பெற்றது.
இப்படத்தில் அனுஷ்காவின் இரு வேட நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.. 'அருந்ததி, ஜெஜம்மா' என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அனுஷ்கா. மேலும், அனுஷ்காவிற்கு முன்னணி நடிகையாக தனித்துவமான வரவேற்பை இப்படம் பெற்றுத் தந்தது.
இப்படம் வெளிவந்து 13 ஆண்டுகள் முடிந்ததையடுத்து படம் பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார் அனுஷ்கா. “ஜெஜம்மா, எந்த ஒரு நடிகைக்கும் வாழ்க்கையில் ஒரு முறைதான் இப்படியான கதாபாத்திரம் அமையும், நான் அதற்கு உண்மையாகவே கொடுத்து வைத்தவள். கோடி ராமகிருஷ்ணா சார், ஷியாம் பிரசாத் ரெட்டி, மற்றும் குழுவினருக்கு நன்றி. ரசிகர்களின் பெரிய அன்புக்கும், ஆதரவுக்கும் பெரிய நன்றி. இந்தப் படம் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமான படம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனுஷ்கா நடித்து கடைசியாக 2020 அக்டோபரில் 'சைலன்ஸ்' படம் வெளிவந்தது. அதன்பின் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்கவில்லை.