சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் ஜோடி துபாயில் புத்தாண்டு கொண்டாடியது அனைவருக்கும் தெரியும்.. இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் கூட வெளியிட்டனர்.. அதேசமயம், இருக்கு.. ஆனா இல்ல என ரசிகர்களை எப்போதும் சந்தேகத்திலேயே வைத்திருக்கும் ஜோடியான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இருவரும் கூட ஜோடியாக கோவாவில் இந்த புத்தாண்டை இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விஷயம் வெளியே தெரிய வந்தது வேறு ஒரு ரூபத்தில்.. புத்தாண்டு தினத்தன்று அதை வரவேற்கும் விதமாக ராஷ்மிகா தனது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் ஒன்றை வெளியிட்டார். அதே தினத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் தனது சோஷியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியிருந்தார்.
இந்த இரண்டு புகைப்படங்களும் ஒரே இடத்தில் ஒரே பின்னணியில் தான் எடுக்கப்பட்டுள்ளன. தவிர இந்த இரண்டு பேரின் புகைப்படங்களை பார்த்துவிட்டு இவற்றை எடுத்தது கூட விஜய் தேவரகொண்டாவாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.