'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

ஒமிக்ரான் வடிவத்தில் கொரோனா மூன்றாவது அலை தற்போது பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தியேட்டர்களில் ஜனவரி 10ம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தியேட்டர்களில் உடனடியாக இன்று முதல் அமல்படுத்திவிட்டார்கள்.
ஆனாலும், இணைய முன்பதிவு தளங்களில் பார்க்கும் போது இன்னும் சில தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கான வரைபடம் மட்டுமே காட்டப்படுகிறது. அதே சமயம், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டுள்ள வரைபடம் இடம் பெற்றுள்ளது.
இன்னும் சில மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தை ஜனவரி 13ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். கடந்த வருடம் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் தான் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது. எனவே, 'வலிமை' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்காது என்றே சொல்கிறார்கள்.




