'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
எனிமி படத்தை அடுத்து விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் ‛வீரமே வாகை சூடும்'. குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இந்த படம் மூலம் இயக்குனாக களமிறங்கி உள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று(டிச., 28) படத்தின் டீசரை வெளியிட்டனர்.
சாமானியன் ஒருவன் பணம், பலம் படைத்த வில்லன்களை எதிர்கொள்வதே கதையாக அமைந்துள்ளது. டீசர் முழுக்க விஷால் ஆக் ஷனில் அதிரடி காட்டி உள்ளார். இறுதியில் அப்போ சண்டையை நிறுத்த மாட்டியா என கேட்க, அதை என் எதிரி தான் முடிவு பண்ணனும் என விஷால் கூறுவது போன்று டீசர் முடிகிறது. நிச்சயம் அதிரடி ஆக் ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது. வருகிற ஜன., 26ல் குடியரசு தினத்தன்று படத்தை தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.