அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் (90) சென்னையில் இன்று(டிச., 24) காலமானார். வயது மூப்பு காரணமாக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த ‛நாளை நமதே', சிவகுமாரின் ‛மறுபக்கம்', கமல்ஹாசனின் ‛நம்மவர்' போன்ற படங்களை இயக்கி உள்ளார் சேதுமாதவன். ‛‛ஓடயில் நின்னு, யாக்ஷி, கடல் பாலம், ஆரா நாழிக நேரம், அச்சனும் பாப்பாயும், ஒப்போல்'' உள்ளிட்ட மலையாளத்தில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கி உள்ளார். 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள இவர் 4 முறை சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட இவரது படைப்புக்காக 10 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் அறிமுகம் செய்ததும் இவர் தான். மலையாளத்தில் 'ஜனசுந்தரி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கன்னியாகுமரி' என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்க வைத்தார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சேதுமாதவன், வயது மூப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் மறைந்தார்.
சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல் வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்'' என தெரிவித்துள்ளார்.