22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்தியத் திரையுலகத்தில் தற்போது பான்-இந்தியா படங்கள் அதிகமாகி வருகிறது. தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்கள், ஹிந்தியில் தயாராகும் படங்கள் இந்திய அளவில் வெளியாகி வருகின்றன. இனி வரும் காலங்களில் இது போன்ற படங்கள் அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியப் படங்கள் வட இந்தியா வரை செல்ல ரஜினிகாந்த், ராஜமவுலி ஆகியோர்தான் காரணம் என தனுஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இந்திய சினிமாவை வடக்கு, தெற்கு என பிரித்துப் பார்ப்பதை நான் எதிர்க்கிறேன். அது இந்திய சினிமா என்றுதான் எப்போதும் இருக்க வேண்டும். ஒரு பெரிய மாற்றத்திற்கு நாம் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். அது மிகவும் ஆரோக்கியமானது. திரைப்படங்களுக்கு, நடிகர்களுக்கு, படைப்பாளிகளுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் இரண்டு படங்கள் இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றன. ஆரம்பத்தில் ரஜினிகாந்த் ஒரு அதிசயமாக அழைக்கப்பட்டார். அதன்பின் அந்த அதிசயம் தேசிய அளவில், பிறகு சர்வதேச அளவில் அழைக்கப்பட்டது. அவருக்கு ஜப்பான், அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். அதன் பிறகு 'பாகுபலி' அந்த டிரெண்டைத் தொடர்ந்தது.
நடிப்பில் எபிசிடி என்பதை எனது அண்ணன் செல்வராகவன்தான் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு பாலுமகேந்திரா சார், வெற்றி மாறன், ஆனந்த் எல் ராய், பால்கி ஆகியோர் சொல்லிக் கொடுத்தது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. கடந்த 20 வருடங்களில் ஆறேழு சிறந்த இயக்குனர்களுடன் பணி செய்துள்ளேன். அவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.