பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாகம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பிரமாண்டமாக நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த இசை வெளியீடு விழாவில் படக்குழுவினர் மட்டுமன்றி உலக சினிமாவில் உள்ள பல பிரபலங்களையும் கலந்து கொள்ள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




