நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. முதல் நாள் வசூலாக 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படம் 'புஷ்பா' என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது. இப்படம் மூலம் பான்-இந்தியா ஸ்டார் ஆக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளார்.
அவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியாக அதிகமான பார்வைகளைப் பெற்ற படங்களாக உள்ளன. ஆனால், அவரது படங்கள் தெலுங்கில் வெளிவரும் நாளில் ஹிந்தியிலும் வெளியாவது 'புஷ்பா' படத்தில்தான் நடந்துள்ளது.
இத்தனைக்கும் ஹிந்தியில் படத்தை பெரிய அளவில் பிரமோஷனும் செய்யவில்லை. இருந்தாலும் அங்கு முதல் நாளில் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
தமிழில் கூட நேற்று இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழிலும் படத்தை சரியாக பிரமோஷன் செய்யவில்லை. பத்திரிகையாளர் காட்சியைக் கூட நாளைக்குத்தான் நடத்துகிறார்கள். தெலுங்கில் காட்டிய அக்கறையை மற்ற நான்கு மொழிகளுக்கும் காட்டியிருந்தால் இப்படம் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என டோலிவுட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.