ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக இயக்குனர் ராஜமவுலி அறிவித்துள்ளார். இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம் படம் அடுத்தாண்டு செப். 9ம் தேதி வெளியாகிறது.
மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மவுனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜமௌலி கூறுகையில், பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது. இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன் என்றார்.