'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் அனைவரும் இந்தியர் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் சினிமா என்பது இதுவரையில் அந்தந்த மாநில மொழிகளில் சார்ந்ததாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரே மொழி என்பது மாறி பல மொழிகள் என வளர்ச்சி அடைந்துள்ளது.
அதற்கு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படங்கள் விதை போட்டது. தெலுங்கு, தமிழில் தயாரான அந்தப் படத்தை கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள். அனைத்து மொழிகளிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியிட ஆரம்பித்தனர். ஹிந்தியில் தயாராகும் படங்களை தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது அடுத்தடுத்து பல படங்கள் அப்படி வெளிவர உள்ளன. தெலுங்கில் 'ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்', தமிழில் 'எதற்கும் துணிந்தவன்', கன்னடத்தில் 'கேஜிஎப் 2', ஹிந்தியில் '83' ஆகிய படங்கள் இப்படி இந்தியா முழுவதும் வெளியாக உள்ள சில முக்கிய படங்கள்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த 'மரைக்காயர்' படமும், நேற்று வெளியான 'புஷ்பா' படமும் பான்-இந்தியா படங்களாக வெளிவந்தன. இப்படி பான்-இந்தியா படங்களாக பல படங்கள் வெளிவர ஓடிடி தளங்களும் ஒரு காரணமாக உள்ளன. ஒரு படத்தை இப்படி 5 மொழிகளில் வெளியிடும் போது அவற்றைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
எனவே, இனி வரும் காலங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளிவரும் வாய்ப்புகள் மிக அதிகம். அதோடு, தமிழ், தெலுங்கு நடிகர்களும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் விதத்திலும் படங்கள் தயாரிக்கப்படலாம்.
இதுநாள் வரை இந்தியப் படங்கள் என்றால் ஹிந்திப் படங்கள் மட்டுமே என்ற ஒரு நிலை இருந்தது. அதை சமீப காலமாக பல தென்னிந்தியப் படங்கள் மாற்றி அமைத்துவிட்டன. இனி வரும் காலங்களில் எந்த இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அவை இந்தியப் படங்கள் என்று அடையாளப்படுத்தப்படும் நாள் சீக்கிரமே வரும். அந்த அளவிற்கு சினிமாவால் இந்தியத் திரையுலகம் ஒன்றிணைய ஆரம்பித்துவிட்டது.
'ஒரே நாடு' என்ற திட்டத்தை திரையுலகம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது.