நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று டிசம்பர் 17ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.
4 மொழிகளில் நேற்று வெளியான நிலையில் மலையாளத்தில் மட்டும் படம் வெளியாகவில்லை. படத்தின் மலையாள டப்பிங்கில் 'சின்க்' பிரச்சினை கடைசி நேரத்தில் ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. எனவே, படத்தை கேரளாவில் வெளியிடும் நிறுவனம், படம் டிசம்பர் 18ம் தேதிதான் வெளியாகும் என அறிவித்தது.
அதன்படி கேரளா முழுவம் இன்று தான் படம் வெளியாகிறது. பொதுவாகவே அல்லு அர்ஜுன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும், படத்தில் மலையாள நடிகரான பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். எனவே, கேரள வசூலில் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நேற்று திட்டமிட்டபடி வெளியாகாத காரணத்தால் முதல் நாள் வசூல் கிடைக்காதது அவர்களுக்கு நஷ்டம்தான்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கிலும் இப்படம் கேரளாவில் நேற்று வெளியாகி உள்ளது.